×

சீனாவிலிருந்து திரும்பிய தி.மலை மாணவிக்கு கொரோனா பாதிப்பு இல்லை: மருத்துவர்கள் தகவல்

தி.மலை: சீனாவிலிருந்து திரும்பிய திருவண்ணாமலை மாணவிக்கு  கொரோனா பாதிப்பு இல்லை என திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் முதன் முதலில் பரவிய கொரோனா வைரசுக்கு, தற்போது ‘கோவிட்-19’ என்று பொதுவான பெயரை உலக சுகாதார அமைப்பு சூட்டியுள்ளது. சீனா, ஹாங்காங், ஜப்பான் உட்பட 28 நாடுகளில் மிகவும் வேகமாக பரவி வரும் இந்த நோயை குணமாக்க,  இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், சீனாவில் இதன் தாக்குதலால் பலியாகும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

இந்த வைரசால் பாதிக்கப்பட்ட சுமார் 1350-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் மருத்துவ படிப்பிற்காகவும், மேல் படிப்பை தொடர்வதற்காகவும், சீனா நாட்டில் தங்கி படித்து வருகிறார்கள். சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் அங்கிருந்து தாய் நாட்டிற்க்கு பல்வேறு நபர்கள் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவி சீனாவில் படித்து வந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பால் அப்பகுதியே போர்களமாகி இருப்பதால் அங்கிருந்து கடந்த 30-ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு சளி, தும்மல் காரணமாக கடந்த 11-ம் தேதி மருத்துவமனை தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில்; தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. அவர் நலமாகவே உள்ளார். இருப்பினும் சளி, தும்மல் அதிக அளவில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.


Tags : victim ,Corona ,Doctors ,China , China, Malay student, corona, no impact
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...