×

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதமாகிறது: மாநில தேர்தல் ஆணையம் பதில்

மதுரை: திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட தாமதம் ஆவதால் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தாமதமாவதாக உயர்நீதிமன்ற கிளையில் மாநில தேர்தல் ஆணையம் பதில் தெரிவித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் பட்டியலை வெளியிட தாமதம் செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கை 3 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : elections ,State Election Commission , Corporation, Municipal Elections, State Election Commission, High Court Madurai Branch
× RELATED கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி:...