×

9ம் வகுப்பு மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி பயிற்சி : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கூறியதாவது: பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தை மே மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்த உள்ளது. இந்த திட்டத்தில் சேர்க்க ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 மாணவர்கள் இணைய தளம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தற்ேபாது பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பில் படித்து வரும்  மாணவர்கள் தான் இந்த பயிற்சிதிட்டத்தில் சேர முடியும். இதன்படி தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் மார்ச் 12ம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மைய இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் தங்கள் அசல் சான்றுகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான இறுதிப் பட்டியல்கள் மார்ச் 30ம் தேதி வெளியிடப்படும்.

Tags : School education announcement , Young scientist training ,students ,9th grade,School education announcement
× RELATED திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி...