×

500 சவரன் வரதட்சணை வாங்கவில்லை அவதூறு பரப்புவதாக மருமகள் மீது ஐபிஎஸ் அதிகாரியின் தந்தை போலீசில் புகார்

சென்னை: தங்கள் மீது அவதூறு பரப்புவதாக மருமகள் மீது ஐபிஎஸ் அதிகாரியின் தந்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திண்டுக்கலை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் ஐபிஎஸ் அதிகாரியின் தந்தையான ராஜகுரு அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2017ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையை சேர்ந்த அருணா என்பவருக்கும்  ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சி பெற்று வரும் எனது மகன் ஆனந்துக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு எனது மருமகள் அருணா மனபோக்கு சரியில்லை என்று எனது மகன் குடும்ப நல நீதிமன்றதில் விவாகரத்து கேட்டுள்ளார். வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது எனது மகன் எடுத்த முடிவு. இந்நிலையில் எனது மகன் புகழுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் 500 சவரன் நகை வரதட்சனையாக வாங்கியதாக பொய்யாக தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனது மருமகள் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் 500 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டதாக திருமணத்திற்கு முன்பே அவரது தந்தை கூறினார். இதனால் நாங்கள் அவர்களிடம் எதையும் வரதட்சனையாக திருமணத்தின் போது கேட்கவில்லை.

இதற்கிடையே நாங்கள் வரதட்சனை கேட்டு கொடுமை செய்வதாக தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் என் மகன் மற்றும் மனைவி மீது அருணா புகார் அளித்துள்ளார். எனவே பொய்யான குற்றச்சாட்டை எனது மருமகள் அருணா எங்கள் மீது காவல் நிலையத்தில் அளித்தும் அவதூறு பரப்பியும் வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். ஐபிஎஸ் ஆனந்த் மனைவி அருணா கடந்த திங்கள் கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் எனது கணவர் மீது வரதட்சனை கொடுமை கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும், எனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்ய கோரி மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு வழக்கு பதிவு செய்ய கோரி உண்ணாவிரதம் இருக்க சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : slander IPS officer ,officer ,IPS ,daughter-in-law , IPS officer's, father lodges complaint, police ,daughter-in-law's defamation
× RELATED தேசிய புலனாய்வு முகமையின் தலைவராக...