×

சிண்டிகேட் வங்கி லாபம் 4 மடங்காக உயர்வு

சென்னை: சிண்டிகேட் வங்கியின் லாபம் 4 மடங்காக உயர்ந்துள்ளது.  பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி, டிசம்பருடன் முடிந்த 3வது காலாண்டில் 434.82 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. வங்கியின் வராக்கடன்  குறைந்ததால் இந்த லாபம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில்  இந்த வங்கியின் லாபம் 107.99 கோடியாக இருந்தது. தற்போது இந்த வங்கியின் வருவாய் 6,316 கோடி. இது முந்தைய ஆண்டில் ₹6,077 கோடியாக  இருந்தது. வங்கியின் வராக்கடன் விகிதம் 12.54 சதவீதத்தில் இருந்து 11.33 சதவீதமாக குறைந்துள்ளது. வராக்கடன் அளவு 25,330 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் 26,184 கோடியாக இருந்தது. வராக்கடனுக்கு வங்கி ஒதுக்கிய  தொகை 1,286 கோடி. முந்தைய ஆண்டு இதே காலக்கட்டத்தில் ஒதுக்கீடு செய்த தொகை 909 கோடியாக இருந்தது என வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.


Tags : Syndicate Bank , Syndicate Bank ,profits
× RELATED சிண்டிகேட் வங்கி சார்பில் நிதி விழிப்புணர்வு கூட்டம்