×

அனைத்து பிரச்னைகளுக்கும் இந்த ஆண்டிலேயே தீர்வு: சகாரா தலைவர் உறுதி

புதுடெல்லி: சகாரா நிதி நிறுவனத்தின் 42வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்த நிறுவன தலைவர் சுப்ரதா ராய் முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: உரிய நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு  பணத்தை வழங்குவதை சகாரா குழுமம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இருப்பினும், சில விரும்பத்தகாத சூழ்நிலைகளால் கடந்த 7 ஆண்டுகளாக தாமதம் ஏற்பட்டு விட்டது. நடைந்த செபி வழக்கில், சகாரா குழும நிறுவனங்களின் பத்திர  விற்பனையில் திரட்டிய நிதி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செபி - சகாரா கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பிரச்னைகளுக்கு விரைவில், இந்த 2020 ஆண்டிலேயே தீர்வு கிடைக்கும். வெளிநாட்டை சேர்ந்த 2 முதலீட்டாளர்கள்,  எங்களின் ரியல் எஸ்டேட் மற்றும் நகர மேம்பாட்டு வர்த்தகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர் என கூறியுள்ளார். செபி-சகாரா கணக்கில் கடந்த 1ம் தேதிப்படி 15,448.67 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags : Sahara , Sahara Chairman, Sahara Financial Institution, Subrata Roy
× RELATED சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் மரணம்