×

கேரள சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் போலீசாரின் 25 கைத்துப்பாக்கிகள் 12,601 தோட்டாக்கள் மாயம்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை

திருவனந்தபுரம்: 2019ம் ஆண்டுக்கான மாநில கணக்கு தணிக்கை அறிக்கையை கேரள சட்டப்பேரவையில் நேற்று நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தாக்கல் செய்தார். அதில், கேரள டிஜிபி மற்றும் காவல்துறை குறித்த திடுக்கிடும் தகவல்கள்  குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  ேகரளாவில் பல்வேறு ஆயுதப்படை முகாம்கள் மற்றும் திருச்சூர் போலீஸ் அகாடமியில் இருந்த 12,601 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் திருவனந்தபுரம் ஆயுதப்படை முகாமில் இருந்து 25  கைத் துப்பாக்கிகள் மாயமாகியுள்ளன. துப்பாக்கி தோட்டக்களுக்கு பதிலாக போலி தோட்டாக்கள் வைத்து கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. துப்பாக்கி தோட்டாக்கள்  மற்றும் துப்பாக்கிகள் மாயமானது குறித்து விசாரணை நடந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு துப்பாக்கி தோட்டாக்கள் மாயமானது பாதுகாப்பை பாதிக்கும் பிரச்னையாகும்.

இது தவிர மாநில டிஜிபி பல்ேவறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். எஸ்ஐ உட்பட  போலீசாருக்கு குடியிருப்புகளை கட்ட ₹2.81 கோடி மாநில அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால் இந்த பணம் எஸ்பிக்கள் மற்றும் ஏடிஜிபிகளுக்கு ஆடம்பர வீடுகள்  கட்டுவதற்காக ெசலவிடப்பட்டுள்ளது. இது தவிர டெண்டர் விடாமல் 2 குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில்,  ‘‘குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். ஆயுதங்கள் காணாமல் போனது கடும் அதிர்ச்சி தருகிறது’’ என்றார்.


Tags : policemen ,Kerala Legislative Assembly Congress ,prosecutions , Kerala Legislative Assembly, 25 Handguns, 12,601 Bullets, Congress
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்