×

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 66 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அம்பத்தூர் பட்டரைவாக்கம் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 9 வயதில் மகள் உள்ளாள். சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த 4ம் தேதி இரவு சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அதே பகுதியில் வசிக்கும் தேவேந்திரன் (66) என்பவர் சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து நைசாக பேசி வீட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்துள்ளார். மேலும், ‘இதை யாரிடமும் சொல்லக்கூடாது’ என சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் சிறுமிக்கு மீண்டும்  தேவேந்திரன்  பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, சிறுமி பெற்றோரிடம் கூறி அழுதார். இதையடுத்து பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், தேவேந்திரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தேவேந்திரனை போலீசார் நேற்று கைது செய்தனர்.Tags : Arrest of minor, molestation, poxo, old man
× RELATED செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்