×

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கான கணக்கெடுப்பில் மக்கள் பங்கேற்க வேண்டும்: ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னை : மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கானகணக்கெடுப்பில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை : மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் வரும் 29ம் தேதி வரை சீர்மிகு நகரங்களுக்கு சிறப்பான வாழ்வாதார குறியீட்டின் அடிப்படையில் தரவரிசை கணக்கெடுப்பு நடைபெருகிறது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை வாழ்க்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத் தன்மை ஆகிய 3 வகையாக பிரித்து கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, தங்குமிடம், தூய்மை, திடக்கழிவு மேலாண்மை, பாதுகாப்பு, பயண வசதி, பொழுதுபோக்கு அம்சங்கள், பொருளாதார மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகள், சுற்றுச்சூழல், பசுமை இடங்கள் மற்றும் கட்டிடங்கள், எரிசக்தி நுகர்வு, நகரமீள்சக்தி உட்பட 14  பிரிவுகளாக மதிப்பிடப்பட உள்ளது.

பொதுமக்களின் கருத்துகளை அறிய, மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சகம் இணையதளத்தில் http://eol2019.org/CitizenFeedback%2c என்ற பிரிவின் கருத்துகளை வழங்கலாம். எனவே பொதுமக்கள் இந்த ஆய்வில் பங்கேற்று, சென்னை குறித்த தங்கள் கருத்துக்களை பதிவிட வேண்டும் எனவும், மேலும், #MyCityMyPride என்கின்ற தலைப்பில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலம் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Commissioner ,Central Government ,Smart City Cities , Central Government, Smart City Cities, Commissioner Prakash
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...