×

12 ஆண்டுகளுக்கு பின் கிடைத்தது நீதி... நெல்லையில் செவிலியர் பலாத்கார செய்யப்பட்டு கொலையான வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு

நெல்லை: நெல்லையில் செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  செவிலியர் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராஜேஷ் கண்ணா, வசந்துக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளிடைக்குறிச்சியில் 2008ம் ஆண்டு நடந்த சம்பவத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே வைராவிக்குளம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  செவிலியராக பணிபுரிந்து வந்தவர் தமிழ் செல்வி(53). இவரை அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2008ம் ஆண்டு 6 பேர் கொண்ட கும்பல், கற்பழித்து, கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளையும் கொள்ளையடித்தது தொடர்பான  வழக்கு கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நெல்லையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில்  ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக நீதிபதி இந்திராணி அறிவித்தார். மேலும் கைது செய்யப்பட்ட எஞ்சிய 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளிகளான ராஜேஷ் கண்ணா மற்றும் வசந்த குமார் ஆகியோருக்கு தூக்கு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Tags : nurse ,death ,Nellayi ,Nellis , Paddy, Nurse, Sex, Harassment, Murder, Hanging, Destiny, 2 Offenders, Human Court, Judgment
× RELATED உலக செவிலியர்-அன்னையர் நாள்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து