×

ஐகோர்ட் நீதிபதிகள் மேற்பார்வையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்: அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேற்பார்வையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என அப்பாவு வலியுறுத்தியுள்ளார். மேலும் டிஎன்பிஎஸ்சி  முறைகேடு குறித்த தவறுகளை தட்டிக்கேட்போமே தவிர தவறுக்கு ஒருபோதும் துணை போனது கிடையாது என அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மற்றும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர். அப்போது மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். அப்போது பேசிய அப்பாவு, அமைச்சர் ஜெயக்குமார் கூறிய புகாருக்கு மறுப்பு தெரிவித்தார்.  டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என கேள்வி எழுப்பிய அவர், ஐகோர்ட் நீதிபதிகள் மேற்பார்வையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அப்பாவு, டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கியுள்ள ஐயப்பனுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார். நான் 25 ஆண்டுகாலம் அரசியலிலும், 15 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர் என்ற நிலையில் பல இடங்களுக்கு செல்லும் போது என்னுடன் பலர் புகைப்படம் எடுத்திருக்கலாம். கைது செய்யப்பட்ட ஐயப்பனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் எங்கள் கட்சியிலும் இல்லை. தவறுக்கு ஒருபோதும் நான் துணை போகமாட்டேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர் வீடுகளில் நோட்டு எண்ணும் இயந்திரம் உள்ளது. தலைவரை பற்றியும், உதயநிதி ஸ்டாலினையும் அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். எங்கள் தலைவர்களைப் பற்றி விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என அப்பாவு கடுமையாக சாடினார்.

Tags : DNPSC ,judges , Icort Judge, Supervision, DNPSC Examination, to be Conducted, Father
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...