×

பேரையூர் சுற்றுவட்டார பகுதியில் மழையின்றி, நோய் தாக்கி கருகும் சூரியகாந்தி பயிர்கள்: வேதனையில் விவசாயிகள்

பேரையூர்: பேரையூர் பகுதியில் மழை பெய்யாததால் நோய்த்தாக்கி, காய்ந்து கருகி வரும் சூரியகாந்தி செடிகளை பார்த்து விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.மதுரை மாவட்டம் பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, சாப்டூர், எழுமலை, டி.கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, உள்ளிட்ட பேரையூர் தாலுகா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மழையில்லை. இதனால் குறைந்த அளவே பெய்கின்ற மழைக்காலங்களில் மானாவாரி நிலங்களில் சிறு, குறு விவசாயிகள் சோளம், மக்காச்சோளம், கம்பு, குதிரைவாலி, பருத்தி உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். போதிய மழையில்லாமல் போனதால் அனைத்து பயிர்களும் விளைச்சலாகி, விளைவித்த கூலிகூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், சங்கரலிங்காபுரம், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், வாழைத்தோப்பு, அணைக்கரைப்பட்டி, உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். இந்த சூரியகாந்தி பயிர்கள் போதிய மழையில்லாமல் வளர்ச்சி இன்றி தரமின்றி மெலிந்த பயிர்கள், குட்டையாகவே உள்ளபோது பூப்பூக்கத்தொடங்கி விட்டது. மேலும் பயிர்களின் ஊடே நோய் தாக்கி காய்ந்து கருகியும், சூரியகாந்தி செடி முழுவதும் நோய்த்தாக்கி பூஞ்சைகளாக ஒட்டிக்கொண்டும் சூரியகாந்தி பயிர்கள் செத்து மடிகின்றன.இதனால் இப்பகுதியில் சூரியகாந்தி பயிரிட்ட விவசாயிகள் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வேதனையடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி வறட்சிப்பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாய சங்கத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Peraiyur , surrounding , Peraiyur, rain , Farmers ,agony
× RELATED வாட்டி வதைக்கும்...