×

பழநியில் தைப்பூசம் முடிவடைந்தும் பாதயாத்திரை பக்தர்கள் வருகை: கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை

பழநி: பழநியில் தைப்பூசம் தேரோட்டம் முடிவடைந்தும் பாதயாத்திரை பக்தர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.பழநி நகரில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இத்திருவிழா கடந்த பிப். 2ம் தேதி துவங்கியது. முத்திரை நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த பிப்.8ம் தேதி நடந்தது. நேற்றுடன் விழா முடிவடைந்தது. எனினும், தற்போதும் பழநிக்கு பாதயாத்திரையாக அதிகளவிலான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பழநி நகரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபராம் செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் வியாபாரம் செய்ய குவிந்துள்ளனர்.

அதுபோல் வரும் பக்தர்களிடம் பிச்சை எடுப்பதற்காகவும் ஏராளமானோர் பழநி நகரில் முற்றுகையிட்டுள்ளனர். தைப்பூச திருவிழாவின் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரத்து 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விழா முடிவடைந்ததால் போலீசார் திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது உள்ளூர் போலீசார் மட்டுமே போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அளவுக்கு அதிகமான பக்தர்கள் கூட்டம் நிலவுவதால் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறப்பு காவல்டை போலீசாரையாவது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்வெயிலின் காரணமாக அநேக பக்தர்களும் இரவில்தான் நடப்பது வழக்கம். நெடுஞ்சாலைகளில் ரோந்துப்பணி மேற்கொள்வது குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் பயத்துடனேயே தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குற்ற சம்பவங்களை தடுக்கவும் திருவிழா காலங்களில் மேற்கொள்ளப்பட்டதைப்போல் போலீசார் தற்போதும் பைக் ரோந்துப்பணி மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : pilgrimage ,Pilgrims ,Pattani ,Palani , Pilgrims , Pattani , Palani , request ,surveillance
× RELATED பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை...