×

எனது நண்பரான பிரதமர் மோடி சிறந்த மனிதர்; இந்திய சுறுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: எனது நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய சுறுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்தாண்டு செப்டம்பரில் நடைபெற்ற 74வது ஐநா பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்த அவர், இந்தியா வரும்படி அழைப்பு விடுத்தார். இதை டிரம்ப் ஏற்றார். இந்நிலையில், டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் 2 நாள் பயணமாக வரும் 24ம் தேதி இந்தியா வருகிறார்.

இதை அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய பயணம் குறித்து அறிவிப்பு வெளியான நிலையில், அதிபர் தனது ஓவல் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். எனது நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய சுறுப்பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இந்த மாதஇறுதியில் நாங்கள் அங்கு செல்ல இருக்கிறோம். விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடக்கும் மைதானம் வரை 5 முதல் 7 லட்சம் பேரை வரவேற்பிற்காக நிறுத்தி வைக்க பிரதமர் மோடி நினைப்பார் என கூறினார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகவும், ஒப்பந்தம் சரியான முறையில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதை அமெரிக்கா நிச்சயம் செய்து கொள்ளும் என்றும் கூறினார். இந்த நட்புறவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கு அவர்கள் விரும்புகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த பயணம் அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags : Modi ,Trump ,Indian , Prime Minister Modi, Indian Circuit, President Trump
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ...