×

ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் விசாரணை: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப் 2ஏ ஆகியவற்றில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றவர்கள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்தவர்கள் என பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதனிடையே ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. 1-ம் வகுப்பு முதல் 8-ம்  வகுப்பு வரை ஆசிரியர் பணிக்காக டெட் 1 தேர்வும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புக்கு ஆசிரியர் பணிக்காக டெட் 2 தேர்வும் நடத்தப்பட்டது.

2012, 13, 14 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சியானவர்கள் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் 2-ம் தாளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாக புகார் எழுத்துள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Teacher ,Examination , Teacher Eligibility Scandal, Complaint, Inquiry, Teacher Selection Board
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...