×

கிரண்பேடியின் எச்சரிக்கையை மீறி, 6வது மாநிலமாக குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது புதுச்சேரி அரசு ; தமிழகத்தில் நிறைவேறுமா ?

புதுச்சேரி:  துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் எச்சரிக்கையை மீறி, குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவாதத்திற்கு பிறகு காங்கிரஸ், திமுக சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட முக்கியமான தீர்மானமும் இந்த சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கேரளா உட்பட 5 மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையிலும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு ; பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

முன்னதாக இன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை குறித்து விவாதிக்காமல் அரசியல் நோக்கத்தோடு கூட்டப்பட்டதாக குற்றச்சாட்டி, கூட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். இதையடுத்து மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு புதுச்சேரி பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி பேரவையில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்ததால் பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதே சமயம்  தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை திரும்பப்பெற வலியுறுத்தியும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பும் செய்தனர்.

காங்கிரஸ், திமுக சுயேச்சை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றம்


இதைத்தொடர்ந்து தீர்மானம் மீது விவாதம் நடத்த சபாநாயகர் சிவக்கொழுந்து அனுமதி அளித்தார். அதில், அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் பாலன், காங்கிரஸ் உறுப்பினர்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தி.மு.க. உறுப்பினர்கள் கீதா ஆனந்தன், வெங்கடேசன், சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினார்கள்.இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்து பேசினார். தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. சபையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.இதனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : government ,Puducherry ,Tamil Nadu , Congress, DMK, Independent, Resolution, Executive, Governor Karnapedi, Puducherry, Legislative Assembly, Citizenship Amendment
× RELATED புதுச்சேரியில் ஓடும்...