×

முத்தரப்பு டி20 போட்டி: இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி

மெல்போர்ன்: முத்தரப்பு டி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மகளிர் டி20 முத்தரப்புத் தொடரின் இறுதிச்சுற்று ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜெஸ் ஜொனாஸ்ஸென் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிச்சுற்று ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, முத்தரப்புத் தொடரை வென்றது.


Tags : team ,women ,Australian ,championship ,Indian , Tri-Series T20: Indian team, champion, Australian women's team
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...