அய்யாக்கண்ணு பேட்டி: முதல்வர் வீடு முன் விவசாயிகள் போராட்டம்

திருச்சி: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் போராட்டம் நடத்த உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார். திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேற்று அளித்த பேட்டி: நதிகள் இணைப்புக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு விவசாயிக்கு ரூ.5 லட்சம் வீதம் 5 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் தர வேண்டும். மரபணு மாற்றப்பட்ட உணவை தடை செய்ய வேண்டும். 2016ம் ஆண்டு வறட்சியில் பாதித்த அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் போராட்டம் நடத்தப்பட உள்ளன. அதனைத்தொடர்ந்து டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஸ்கோயல் கால்களில் விழுந்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என வலியுறுத்த உள்ளோம். அடுத்ததாக திருச்சி காவிரி ஆற்றுக்குள் இறங்கி தொடர் போராட்டமும் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: