×

கேரளாவில் 4 ஆண்டுகளில் பெற்றோரை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது 15,650 வழக்குகள்

திருவனந்தபுரம்: கேரளாவில்  கடந்த 4 வருடங்களில்  ெபற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது 15,650 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.    கேரள சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: வயதான  பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள்  மீது வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடம்  உண்டு. இதன்படி பெற்றோரை  பராமரிக்காவிட்டால் பிள்ளைகளுக்கு 3 மாதம் வரை  சிறையோ, 5 ஆயிரம் அபராதமோ  அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்க சட்டத்தில்  இடம் உள்ளது. கேரளாவில்  பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. கடந்த 4  ஆண்டுகளில் இதுதொடர்பாக 15,650 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன. 2016-17ல்  4767 வழக்குகள், 2017-18ல் 3356 வழக்குகள்,  2018-19ல் 4300 வழக்குகள், 2019-20ல் இதுவரை 3227 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : children ,parents ,Kerala , Kerala, children, 15,650 cases
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்