×

புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு கல்வி அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய கல்வி அலுவலர்களை நியமித்து, அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் புதியதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இங்கு முதன்மை கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு, அந்த அலுவலகங்களுக்கு தலா ஒரு முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் வீதம் 5 முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் உட்பட பிற அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான செலவினங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட இடங்களில் முதன்மை கல்வி அலுவலர்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூரில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வரும் அய்யண்ணன், நாமக்கல் மாவட்டத்திற்கும்; நாமக்கல்லில் பணியாற்றி வரும் உஷா கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் ஆஞ்சலோ இருதயசாமி, செங்கல்பட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை, தொடக்கக்கல்வி இயக்ககத்தில் துணை இயக்குநராக பணியாற்றும் குணசேகரன், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முதன்மை கல்வி அலுவலராகவும், திருவள்ளூரில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றும் திருவளர்செல்வி, சென்னை, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை, தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளர் வெற்றிச்செல்வி, திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல் 7 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேவகோட்டையில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றும் சத்தியமூர்த்தி, காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலராகவும்; பழனியில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றும் கருப்பசாமி, தென்காசிக்கு முதன்மை கல்வி அலுவலராக தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. கோயபுத்தூரில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றும் கீதா, தர்மபுரி முதன்மை கல்வி அலுவலராகவும், மத்திய சென்னை மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றும் சுந்தரராஜ், சென்னை, தொடக்கக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறையில் மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றும் குமரன், கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலராகவும், திருப்பத்தூரில் மாவட்டக்கல்வி அலுவலராக பணியாற்றும் பரமதயாளன், இராணிப்பேட்டை முதன்மை கல்வி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : districts ,Govt. 5 ,Govt , 5 Districts, Appointment of Educational Officers, Government of Tamil Nadu
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...