×

14 கோடி அமெரிக்கர்களின் தகவலை இணைய தளத்தில் திருடவில்லை: அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு சீனா பதில்

பீஜிங்: இணையதளத்தை பயன்படுத்தி வர்த்தக திருட்டில் ஈடுபட்டதாக தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் மீது அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.  சீனாவை ேசர்ந்த ராணுவ வீரர்கள் 4 பேர், கடந்த 2017ம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டு நிறுவனமான ஈக்கியூபேக்சில் இருந்து 14 கோடி அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை இணையதளம் மூலம் திருடியதாக அமெரிக்க நீதித்துறை நேற்று முன்தினம் குற்றம்சாட்டியது. சீன ராணுவமான மக்கள் விடுதலை ராணுவத்தின் ஆராய்ச்சி நிறுவனத்தின் உறுப்பினர்களான வூஜியாங், வாங் கியான், சூகி, லியூலே ஆகிய 4 உறுப்பினர்களும் ஈகியூபேக்ஸ்  நிறுவனத்தின் இணையதளங்களில் ஊடுருவி, கணினி மோசடி, பொருளாதார சதித் திட்டம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக அமெரிக்கா புகார் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா, ‘‘இணையதளம் மூலம் வர்த்தக திருட்டில், சீனா ஈடுபட்டதில்லை. என தெரிவித்துள்ளது.



Tags : China ,US ,Americans , Americans, web site, USA, China
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...