×

ரஞ்சி கோப்பை லீக் ஆட்டம் தமிழ்நாடு-சவுராஷ்டிரா மோதல்

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவில் தமிழகம் - சவுராஷ்டிரா மோதும் லீக் ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. நடப்பு ரஞ்சி தொடரின் லீக் சுற்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எலைட் பி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு இதுவரை 7 லீக் ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளதுடன், 3 போட்டிகளில் டிரா செய்து 19 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று தொடங்கும் கடைசி லீக் போட்டியில் சவுராஷ்டிரா அணியை தமிழ்நாடு எதிர்கொள்கிறது. சவுராஷ்டிரா அணி இதுவரை 7 போட்டிகளில் 3 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 28 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

அந்த அணி கால் இறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். அதே சமயம், தமிழக அணிக்கு வெற்றி கட்டாயம் என்பதுடன் மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே கால் இறுதி வாய்ப்பு அமையும். அதனால் இன்று தொடங்கும்  போட்டியில் முழுமையாக 7 புள்ளிகளை பெறும் வகையில் விளையாட தமிழ்நாடு முனைப்பு காட்டும். தோல்வி மட்டுமல்ல டிரா செய்தாலும் தமிழ்நாடு தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான். ரஞ்சி தொடர்களில் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 4 போட்டிகளும் டிராவில் முடிந்துள்ளன. 


Tags : clash ,match ,Ranji Trophy League ,Saurashtra ,Tamil Nadu , Ranji Cup, League match, Tamil Nadu-Saurashtra, clash
× RELATED நடப்புத் தொடரில் முதல் மோதல்: கொல்கத்தாவை சமாளிக்குமா பஞ்சாப்