திருப்பதியில் இலங்கை பிரதமர் ராஜபக்சே சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் ராஜபக்சே சுவாமி தரிசனம் செய்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை பிரதமர் ராஜபக்சே நேற்று முன்தினம் ஒரே நாளில் வாரணாசி, புத்தகயா உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்தார். இந்நிலையில் நேற்று காலை ஏழுமலையான் கோயிலில் நடந்த அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் மகன் யோஷிதா ராஜபக்சே, அமைச்சர் ஆறுமுகம் தொண்டைமான் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக ராஜபக்சேவுக்கு கோயில் நுழைவாயிலில் தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அர்ச்சகர்கள் இஸ்தி கப்பால் மரியாதை வழங்கினர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு ராஜபக்சே, தங்க நாணயங்களை காணிக்கையாக செலுத்தினார். தொடர்ந்து ராஜபக்சே காலை 10.30 மணிக்கு திருமலையில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானத்தில் இலங்கை புறப்பட்டு சென்றார்.

Related Stories:

>