×

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை போக்சோவில் கைது

சென்னை: திருவான்மியூர் வால்மீகி தெருவை சேர்ந்தவர் தெய்வநிதி (45). பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர், விடுமுறையில் வீட்டுக்கு வரும்போதெல்லாம், பிளஸ் 1 பயிலும் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். அவர், கொடுத்த புகாரின் பேரில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார், தெய்வநிதியை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* அனகாபுத்தூரை சேர்ந்த சரஸ்வதி (70), நேற்று முன்தினம் அதே பகுதி அரசு பள்ளி அருகே நடந்து சென்றபோது, ஆட்டோவில் வந்த 3 மர்ம நபர்கள், பக்கத்து தெருவில் கலவரம் நடக்கிறது. எனவே உங்கள் நகைகளை கழற்றி, பையில் வைத்து பத்திரமாக எடுத்து செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதை நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 5 சவரன் நகைகளை கழற்றினார். அதை வாங்கி காகிதத்தில் மடித்து தருவதுபோல் நடித்த ஆசாமிகள், நூதன முறையில் அவற்றை அபேஸ் செய்து கொண்டு தப்பினர்.

* மது போதையில் ரகளையில் ஈடுபட்ட கொளத்தூர் அடுத்த ராஜமங்கலம் 6வது தெருவை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவரை, போலீஸ் எஸ்ஐ மோகன் பிடிக்க வந்தபோது, அவரை தள்ளிவிட்டு ராஜ்குமார் தப்பினார். இதில், எஸ்ஐக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மருத்துவமனையில் அனுமதித்த சக போலீசார், தப்பியோடிய ராஜ்குமாரை கைது செய்தனர்.
* பேசின் பிரிட்ஜ் கே.எம்.கார்டன் பகுதியில் மதுபாட்டில் விற்ற அதே பகுதியை சேர்ந்த தேவி (41), சூர்யா (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 14 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலை ஐஓசி பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்ற தண்டையார்பேட்டை ராஜசேகரன் நகரை சேர்ந்த அக்பர் கான் (24), தமிழன் நகர் மெயின் தெருவை சேர்ந்த லோகநாதன் (எ) கானா லோகு (24), இந்திராகாந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (24), கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த மில்கி (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* அடையாறு கற்பக கார்டன் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (55) வீட்டில், 7 சவரன் நகையை திருடிய, வீட்டு வேலைக்காரி செம்மஞ்சேரியை சேர்ந்த மலர் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* பெசன்ட் நகரில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட பெசன்ட்நகர் ஓடைக்குப்பம் பைண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வகுமார் (எ) வசந்த் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (30). சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை கொளத்தூர் அகத்தீஸ்வரர் நகரிலுள்ள பொன்னுரங்கம் என்பவர் வீட்டின் 2வது மாடியில் சென்ட்ரிங் வேலை செய்தபோது, எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரகாசை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டு உரிமையாளரான பொன்னுரங்கம் (69), சென்ட்ரிங் மேஸ்திரி சேவியர் (43), கட்டிட மேஸ்திரி ரமேஷ் (47) ஆகிய 3 பேரை காவல் நிலையம் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sexual harassment , For the daughter, sexual harassment, father, poxo, arrest
× RELATED புதுக்கோட்டை அருகே மந்திரவாதி பேச்சை...