×

தலைவர்கள் வாழ்த்து

மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்): வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலை பாராட்டுகிறேன். பாஜ.வை டெல்லி மக்கள் புறக்கணித்துள்ளனர். வளர்ச்சி மட்டுமே கைகொடுக்கும். சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் எல்லாம் நிராகரிக்கப்படும் என்பதை டெல்லி தேர்தல் நிரூபித்துள்ளது. ஜே.பி.நட்டா (பாஜ தேசிய தலைவர்): டெல்லி வாக்காளர்கள் தந்த முடிவை மனப்பூர்வமாக ஏற்கிறோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். நிதிஷ் குமார் (பீகார் முதல்வர்): தேர்தலில் மக்கள்தான் உச்ச அதிகாரம் படைத்தவர்கள். அவர்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம்.

ப.சிதம்பரம் (காங். மூத்த தலைவர்): ஆம் ஆத்மி வென்றுள்ளது; வெறுப்பும், வன்முறையும் தோற்றுள்ளது.. வரும் 2021, 2022ல் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு ஓர் உதாரணத்தை கொடுத்துள்ள டெல்லி மக்களுக்கு தலை வணங்குகிறேன். சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்): பாஜ.வின் வெறுப்பு மற்றும் வன்முறை அரசியலுக்கு மக்கள் தக்கபாடம் புகட்டி விட்டனர். கமல்நாத் (மபி முதல்வர்): பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகள் மக்களுக்கு திருப்தி அளித்திருந்தால், டெல்லியில் பாஜ ஆட்சியை பிடித்திருக்கும். மக்கள் அப்படி செய்யவில்லையே?

அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி): அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை இழுப்பது உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களை அரசியலாக்குபவர்களுக்கு எதிராக இந்தியர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை டெல்லி தேர்தல் நிரூபித்துள்ளது.
குமாரசாமி (கர்நாடகா முன்னாள் முதல்வர்): டெல்லியில் வளர்ச்சியை கொண்டு வந்த கெஜ்ரிவாலை தீவிரவாதி என சித்தரித்தவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டி உள்ளனர். பிரசாந்த் கிஷோர் (ஆம் ஆத்மியின் தேர்தல் ஆலோசகர்): இந்தியாவின் ஆன்மாவை பாதுகாத்திட துணை நின்ற டெல்லி மக்களுக்கு நன்றி.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்: ‘‘டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகளை சிதறடித்து வெற்றி பெறும் பாஜ.வின் முயற்சி தோல்வியடைந்து விட்டது. பாஜ.வுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பிராந்திய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்’’. கேரள முதல்வர் பினராய் விஜயன்: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி, நாட்டுக்கு ஊக்கம் அளித்துள்ளதுமுன்னதாக, தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை பினராய் விஜயன் தெரிவித்தார்.

Tags : leaders , Leaders, congratulations
× RELATED நீலகிரி மாவட்ட திமுக., தோழமை...