×

கூரியர் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 6.5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

சென்னை; ஆஸ்திரேலியாவுக்கு கூரியர் மூலமாக 6.5 கிலோ போதைப்பொருள் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மத்திய வருவாய்துறை அதிகாரிகளுக்கு நேற்று சென்னையில் இருந்து கூரியர் பார்சல் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு பெருமளவு போதைப்பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள சந்தேகத்திற்கிடமான கூரியர் பார்சல்களை சோதனை செய்தனர். குறிப்பாக சென்னை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது ஒரு குறிப்பிட்ட பார்சல் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதில் இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்தபார்சலை தனியாக எடுத்தனர். அதில் உள்ள பார்சலை எடுத்து குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை. பார்சலில் இருந்த முகவரிக்கு நேரடியாக சென்று பார்த்தனர். அதுவும் போலி எனத் தெரியவந்தது. மத்திய வருவாய் துறை அதிகாரிகள் பார்சலை நேற்று பிரித்துப் பார்த்தனர். அதில்  மெட்டோ குயிலோன் என்கிற போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 13 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு ரூ.6.5 கோடி. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் கூரியர் அலுவலகத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் கடத்தல் ஆசாமியை பிடிக்க தீவிரம் கட்டி வருகின்றனர்.


Tags : Australia ,Courier , Courier, Australia, narcotics, confiscation
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை