×

7 பேர் விடுதலை விவகாரம்; அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: ஆளுநரை வலியுறுத்த முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: ‘பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து கேட்டு,
இரு வாரத்தில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு’ அதிமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அமைச்சரவை தீர்மானம் மற்றும், மாநில உரிமை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்த அதிமுக அரசிற்கு உச்ச நீதிமன்றம் ‘குட்டு’ வைத்துள்ளது. எனவே இனியாவது உடனடியாக அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநரை வலியுறுத்தி- பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மாபெரும் தேர்தல் வெற்றி மூலம், டெல்லியில் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி-வகுப்புவாதத்தை வீழ்த்தும் என்பதற்கான தெளிவான நிரூபணம் இது. நாட்டின் ஒற்றுமைக்காக நாம், கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய விருப்பங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,government ,Supreme Court , 7 liberated, AIADMK government, MK Stalin
× RELATED வேளாண் மசோதாக்களை எதிர்த்து...