×

மத்தியில் 2 முறை வெற்றி கனியை எட்டிய போதிலும் மாநில தேர்தல்களில் தொடர் தோல்விகளை தழுவும் பாஜக அரசு !!!

டெல்லி : மத்தியில் 2 முறை பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த போதிலும் மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக அரசு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எனினும் பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்திப்பதால் பாஜகவுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

*2014ம் ஆண்டு குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கோவா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. 2018-ம் ஆண்டில் பாஜக, கால் பதிக்காத மாநிலங்கள் என்றால் அவை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மிசோராம், பஞ்சாப், ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா மட்டுமே.

*2014- ஆம் ஆண்டில், 7 மாநிலங்களில் இருந்த பாஜக ஆட்சி, 2015-ல் 13 ஆக வளர்ச்சியடைந்தது. இதுவே 2016-ல் 15 ஆகவும், 2017-ல் 19 ஆகவும் அதிகரித்தது. உச்சக்கட்டமாக, 2018- ஆம் ஆண்டு 21 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி விரிந்து பரந்தது. இதுவே அக்கட்சிக்கு முற்றாகவும் அமைந்தது.

*தாமரை மலரவே மலராது என நினைத்திருந்த மிசோராமில் வெற்றி கனியை பறித்த பாஜக, அதன் கோட்டையாக கருதப்பட்ட மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் தோல்வியடைந்தது.

*ஆந்திராவை ஆண்டு கொண்டிருந்த தெலுங்கு தேசம், கூட்டணியிலிருந்து வெளியேற, ஜம்மு காஷ்மீர், குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

*2019ம் ஆண்டும் பா.ஜ.கவுக்கு ராசியான ஆண்டாக இருக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தும் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் சறுக்கலையே சந்தித்தது.

*கர்நாடகாவில், காங்கிரஸ் ஜனதா தள கூட்டணி ஆட்சியை உடைத்து எடியுரப்பா தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

*இதேப்போன்ற ஒரு சூழலை மகாராஷ்டிராவில் ஏற்படுத்த திட்டமிட்டு தோல்வியை தழுவியது. மகாராஷ்டிரா தோல்வியைத் தொடர்ந்து, ஜார்கண்டிலும் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது பா.ஜ.க.

*கடந்த 14 மாதங்களில் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க பிடியிலிருந்து நழுவி சென்றுள்ளன. ஹரியானாவில் மட்டும், துஷ்யந்த் சவுதாலாவுடன் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்ததால், அங்கு மட்டும் ஆட்சியை பிடித்தது.

*இந்நிலையில் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக படுதோல்வி கண்டுள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 63 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்று தலைநகரில் 3வது முறையாக ஆட்சி அமைத்தது. மறுபுறம் பாஜக வெறும் 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

*இது பாஜக எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. தலைநகர் டெல்லியை கெஜ்ரிவாலிடம் இழந்தது பாஜக கட்சிக்கு பெரும் கவுரவ பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.


Tags : government ,BJP ,state elections ,defeats ,state election , AAP, New Delhi, CM, Arvind Kejriwal, BJP, Assembly, Election, Failure
× RELATED ஒன்றிய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!