×

தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி துவக்கம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல பகுதியான மசினகுடி சரகத்தில் காட்டுத் தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தெப்பக்காடு மசினகுடி சாலையின் இருபுறமும் காய்ந்த புற்களை ஆறு மீட்டர் அகலத்தில் தீ வைத்து வனப்பகுதிக்குள் தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மசினகுடி வனச்சரகத்தில் சாலையோரம் மற்றும் வனப்பகுதியின் உள்ளே என 120கி.மீ. தூரத்திற்கு தீ தடுப்பு கோடு அமைக்கும் பணி நடக்கின்றன.

முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட பகுதிகளான மசினகுடி, சீகூர், சிங்காரா உள்ளிட்ட வனச்சரகங்களில் 400 கி.மீ. தூத்திற்கும் இதேபோல் காய்ந்த புற்கள் செடி, கொடிகள் எரிக்கப்ட்டு தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்ட உள்ளன. இதேபோல் முதுமலை உள்வட்ட பகுதிகளான தெப்பக்காடு, கார்குடி, முதுமலை ஆகிய சரகங்களில் 300 மீ.தூரத்திற்கு தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீ ஏற்படாமல் கண்காணிக்கப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 120 சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு  பந்திப்பூர் வனப்பகுதியில் இருந்து காட்டுத் தீ முதுமலை பகுதிக்கு பரவியதால் பயங்கர சேதம் ஏற்பட்டது. ஆகையால் இந்த ஆண்டு காட்டு தீ ஏற்படாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Fire prevention line
× RELATED மேம்பால பணி காரணமாக தியாகராயர் நகரில் போக்குவரத்து மாற்றம்