×

மூணாறு அருகே உயிருக்கு உலை வைக்கும் சாகச விளையாட்டு: அதிகாரிகள் தடுத்து நிறுத்துவார்களா?

மூணாறு: மூணாறு அருகே நடைபெறும் விபரீதமான சாகச விளையாட்டால் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர். கேரள மாநிலம், மூணாறு அருகே உள்ளது பண்ணியார்குடி. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக தனியார் நிறுவனம் ஒன்று ‘ரோப் வே’ எனப்படும் சாகச விளையாட்டை நடத்தி வருகிறது. இதற்காக மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலகத்தின் அருகில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சியில் 100 அடி உயரத்தில் 250 மீட்டர் நீளத்திற்கு கம்பி அமைத்துள்ளனர். அதில் சுற்றுலா பயணிகளை ‘ரோப்கார்’ போல் கட்டி தொங்கவிட்டு மறுகரையில் கொண்டுபோய் விடுகின்றனர்.

இதில் செல்பவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு கவசமும் கிடையாது. கம்பி அறுந்து கீழே விழுந்தால் உயிர்பிழைப்பது சந்தேகம்தான். இந்த விளையாட்டில் பங்கேற்கும் சுற்றுலா பயணிகளுக்கு உயிருக்கு ஏதாவது நடந்தால் தனியார் நிறுவனம் பொறுப்பேற்காது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொள்கின்றனர். மிகப்பெரிய பாறைகள் நிறைந்திருக்கும் இந்த பகுதியில் தினந்தோறும் விபரீதம் அரங்கேறி வருகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இந்த விபரீத விளையாட்டிற்காக ஒரு பயணியிடம் இருந்து ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரோப் நிறுவப்பட்டுள்ள கோபுரத்தின் உறுதித்தன்மை போன்றவற்றுக்கு பஞ்சாயத்து மற்றும் சுற்றுலாத்துறையிடம் அனுமதி வாங்கவில்லை. மாவட்ட அதிகாரிகள் இந்த விபரீத விளையாட்டை தடுத்து நிறுத்தி சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Munnar ,Empire Stop , life-saving , game ,Munnar,authorities stop?
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...