×

தி.பூண்டி சிங்களாந்தியில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் செடிகள் மண்டி கிடக்கும் அவலம்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி 18 வது வார்டாக இருந்து தற்போது மறுவரையறை செய்த பின்பு நகராட்சியில் 24 வது வார்டாக திருத்தம் செய்து உள்ள சிங்களாந்தி மேலத்தெரு, கீழத் தெரு உள்ளது. இந்த பகுதியில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பத்தின்ர் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு தெருவிற்கும் உள்ள சுடுகாடு 2 கிலோ மீட்டர் தூரத்தில் வளவனாற்று கரையில் உள்ள இந்த சாலை போட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. சாலை சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.தற்போது சாலையில் நடந்து கூட போக முடியாது அளவில் உள்ளது. எனவே சுடுகாடு சாலையை இந்த கோடை காலத்தில் சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தெருவாசிகள் கூறியதாவது:சிங்களாந்தி மேலத்தெரு, கீழத்தெருவிற்கு சுடுகாடு சாலை 1996ம் ஆண்டு தார் சாலை அமைத்து கொடுக்கப்பட்டது.இந்த காலத்தில் ஒரு சாதிக்கு ஒரு சுடுகாடு, சாலை அமைத்து கொடுக்கும் அரசு சிங்களாந்தியில் இரண்டு சாதியினர் பயன்படுத்தும் சுடுகாடு சாலை சீரமைத்து கொடுக்காமல் உள்ளது. கோடை காலத்தில் யாரும் இறந்தால் அடக்கம் செய்ய இந்த சாலையில் போக பிரச்னை அதிகம் இல்லை. ஆனால் மழை காலத்தில் உள்ள பிரச்னைகள் வேறு யாருக்கும் வர கூடாது என்று நினைத்து பார்த்து தான் சென்று வருகிறோம். இருக்கும் போதும் நிம்மதி இல்லை. இறந்த பிறகும் நிம்மதியாக அடக்கம் கூட செய்ய முடியவில்லை என நினைக்கும்போது படும்பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.சாலை சீரமைக்க பல முறை நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சேதம் அடைந்த சிங்காளந்தி மேலத்தெரு, கீழ்த்தெரு சுடுகாடு சாலையை தார்சாலையாக மாற்றித் தர வேண்டும் என்றனர்.

Tags : road ,Sintilandi , Thunderbolt , road , fireworks ,Sintilandi
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி