×

3வது முறையாக தலைநகரை தன்வசமாக்கிய ஆம் ஆத்மி : ஒற்றை இலக்கத்தில் முன்னிலை வகிக்கும் பாஜக

டெல்லி : டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி, அம்மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்கிறது.

 டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த 8ம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே பெரும்பான்மை இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

*புதுடெல்லி தொகுதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை பெற்று உள்ளார். டெல்லி பட்பர்கஞ்ச் தொகுதியில் பாஜகவின் ரவீந்திர சிங் நேகியை விட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 656 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

*பாஜக கட்சி 8 இடங்களில் முன்னிலையில் உள்ளது. கல்காஜி, பவானா, கர்வால் நகர், ஷலிமார் பாக், கிராரியில் பாஜக வேட்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

*ஆம் ஆத்மியில் இருந்து விலகி  காங்கிரஸ் வேட்பாளராக சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்ட அல்கா லம்பா பின்தங்கி உள்ளார்.

*மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.

*தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. ராமகிருஷ்ணபுரம் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பிரமிளா தோகஸ் முன்னிலை வகிக்கிறார்.  

*கரோல் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் விஷேஷ் ரவி, திரிலோக்புரி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் ரோஹித் குமார் ஆகியோரும் முன்னிலை வகிகின்றனர்.

*சீலாம்பூர், தியொலி, முஸ்தபாபாத் மற்றும் ராஜேந்திர நகர் உள்ளிட்ட 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

*இதையடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான சட்டப்பேரவையை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் கலைத்தார்.

*டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமையவுள்ள நிலையில் நடப்பு சட்டப்பேரவை கலைக்கப்பட்டது.

*ஆம் ஆத்மியின் வெற்றி முகத்தை அடுத்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். 


Tags : capital ,BJP , AAP, New Delhi, CM, Arvind Kejriwal, BJP
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...