×

நெல்லை புத்தக கண்காட்சியில் 10 நாள் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சியில் பல்வேறு சாதனைகள்: 62 மணி நேரம் வாசித்த அரசு அலுவலர்

நெல்லை: நெல்லையில் கடந்த 1ம் தேதி தொடங்கிய புத்தக திருவிழாவில் உலக சாதனைக்காக புத்தகம் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இதையொட்டி அங்கு தனி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அணி அணியாக புத்தகம் வாசித்து வந்தனர். அவர்கள் விரும்பி கேட்கும் புத்தகங்கள் புத்தக அரங்கில் இருந்து எடுத்து கொடுக்கப்படுகிறது.இந்த அரங்கில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை உள்ளிட்ட பலவேறு பிரமுகர்களும் அமர்ந்து புத்தகம் வாசித்தனர். மேலும் பார்வையற்ற பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகம் வாசித்தனர். அவர்களுக்கு பிரைலரி முறையிலான புத்தகம் வழங்கப்பட்டது. இதேபோல் காது கேளாதோர் பள்ளி மாணவ, மாணவிகளும் புத்தகம் வாசித்தனர்.

கடைசி நாளான நேற்று காலை 11 மணி முதல் மருதகுளம் ேநஷனல் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புத்தகம் வாசித்தனர். உலக சாதனைக்கான கடைசி குழுவினரான இவர்கள் நேற்றிரவு 11 மணி வரை புத்தகம் வாசித்தனர். 10 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகம் வாசிப்பு இயக்கம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டன.பல்வேறு சாதனைகளும் இந்த வாசிப்பு இயக்கத்தில் நிகழ்த்தப்பட்டன. முதுநிலை வருவாய் அலுவலர் முகமது பயஸ் என்பவர் அதிகபட்சமாக 62 மணி நேரம் புத்தகம் வாசித்தார். பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி 2ம் ஆண்டு மாணவிகள் ஸ்னேகா லட்சுமி, கனகா ஆகியோர் தொடர்ச்சியாக 48 மணி நேரமும் பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள் தொடர்ச்சியாக 24 மணிநேரமும் புத்தகம் வாசித்தனர்.

 இந்த வாசிப்பில் பங்கேற்ற பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. கல்வி நிறுவனங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டன. சுமார் 900 ஆயிரம் பேர் 10 நாள் வாசிப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 240 மணி நேரம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்ெபற உள்ளது. இந்த நிகழ்வுகளை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி செஞ்சிலுவை சங்க நாங்குநேரி கிளை செயலாளர் சபேசன் சுந்தர் உள்ளிட்டோர் கண்காணித்தனர்.

Tags : government official ,Paddy Book Fair , Paddy ,Book Fair, Various achievements ,62 hours
× RELATED மேல்மனம்பேடு பகுதியில் 14 வயது...