×

இந்தியாவுக்கு ரூ.13,330 கோடி மதிப்பிலான வான்வழிப் பாதுகாப்பு கட்டமைப்பு வழங்க அமெரிக்கா ஒப்புதல்


வாஷிங்டன் : இந்தியாவுக்கு ரூ.13,330 கோடி மதிப்பிலான வான்வழிப் பாதுகாப்பு கட்டமைப்பு வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் வகையில் IADWS என்ற ஒருங்கிணைந் வான்வழி பாதுகாப்பு கட்டமைப்பை வழங்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. இதனையேற்று ரூ.13,330  கோடி மதிப்பிலான வான் பாதுகாப்பு ஆயுதங்களை விற்பனை செய்ய, அமெரிக்கா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதில் 5 சென்டினல் ரேடார் சிஸ்டம்ஸ், வானில் இருக்கும் இலக்குகளை வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் 118 அதிநவீன ஏவுகணைகள்,3 வழிகாட்டு அமைப்புகள், 4 கட்டுப்பாட்டு பகுதிகள், எப்ஐஎம் வகையைச் சேர்ந்த 134 ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா வழங்கும்.

இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் வான் பாதுகாப்பு உள்கட்டமைப்பு விரிவுபடுத்தப்படும் என்றும், ஆயுதப் படைகள் நவீனமாக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல்  இந்தியா, அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு நல்லுறவு வலுப்பெறும் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இம்மாத இறுதியில் இந்தியா வரும்போது, இரு நாடுகளும் 3 பில்லியன் டாலர் வரை கூடுதல் பாதுகாப்பு ஒப்பந்தங்களை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.

Tags : US , India, US, sanction, aviation, defense, structure, weapons
× RELATED அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில்...