×

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

மவுண்ட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 297 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பே ஓவல் மைதானத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 112, ஸ்ரேயாஸ் 62, மணீஷ் பாண்டே 42, பிரித்விஷா 40 ரன்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து அணி வீரர் பன்னெட் 10 ஓவர்கள் வீசி 64 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Tags : India ,series ,New Zealand ,ODI , New Zealand
× RELATED இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள்...