×

ஆம் ஆத்மி-பாஜக இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும் இன்னும் நேரம் இருக்கிறது: மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி நம்பிக்கை

புதுடெல்லி: ஆம் ஆத்மி-பாஜக இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும் இன்னும் நேரம் இருக்கிறது. ஆனால், அதனை நாங்கள வேகமாக நிரப்பி வருகிறோம் என்று டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே முன்முனை போட்டி நிலவியது. இதில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இதனை தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணம் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணக்ககையில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால், ஆம் ஆத்மி கட்சி 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், முன்னிலை நிலவரம் மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து பேசிய மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி, டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அதற்கு நானே பொறுப்பு என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ஆம் ஆத்மி-பாஜக இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தாலும் இன்னும் நேரம் இருக்கிறது. ஆனால், அதனை நாங்கள வேகமாக நிரப்பி வருகிறோம். நான் பதட்டமாக இல்லை. இது பாஜகவுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இன்று டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுகிறோம். டெல்லியில் பாஜக 48 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும். கருத்து கணிப்புகளை பொய்யாக்கி பாஜக கண்டிப்பாக தேர்தலில் வெற்றிபெறும். ஏன் 55 இடங்களில் வென்றாலும் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். பாஜகவின் தொண்டர்கள் பெறவிருக்கும் இந்த வெற்றியை கொண்டாட ஏற்கனேவே தயாராகிவிட்டார்கள். ஆனால், முடிவு எப்படி இருந்தாலும் யாரும் எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்தை குறைகூற கூடாது, என கூறியுள்ளார்.


Tags : Manoj Tiwari ,BJP ,Aam Aadmi Party , AAP, BJP, Delhi, Assembly elections, Manoj Tiwari
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...