×

படிக்கட்டில் நின்றதை கண்டித்ததால் பஸ் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள் : டிரைவர், கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:  சென்னை கே.கே நகரில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் அண்ணா சதுக்கத்திற்கு மாநகர பேருந்து (12ஜி) சென்று கொண்டிருந்தது. டிரைவர் மனோகரன் பஸ்சை ஓட்டி வந்துள்ளார். பேருந்து கே.கே. நகர் காமராஜர் சாலையில் வந்தபோது படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் 2 பேர்  நின்றுள்ளனர். அவர்களை உள்ளே வரும்படி டிரைவர் கூறியுள்ளார். இதனால் அவர்கள் டிரைவரிடம்  வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது மாணவர்கள் தங்களது நண்பர்களுக்கும் போன் செய்து வரவழைத்தனர். பைக்கில் வந்த 2 வாலிபர்கள் மாணவர்கள் 2 பேருடன் சேர்ந்து டிரைவர் மனோகரனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

தகவலறிந்து கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாக்குதலில் காயமடைந்த மனோகரனை மீட்டு கே.கே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாணவர்கள் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் டிரைவரை தாக்கிய மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கே.கே.நகர் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : driver Schoolchildren ,bus driver , Schoolchildren , assaulted ,bus driver,denouncing the stairs
× RELATED படிக்கட்டில் நின்றதை கண்டித்த பஸ்...