×

சர்வேயர் லைசென்ஸ் பெற டிப்ளமோ படித்தவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நில அளவை செய்வதற்கான உரிமம் பெற டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்தவர்களுக்கு 3 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு, தனியாருக்கு சொந்தமான நிலங்களை சர்வே செய்யும் பணியை நில அளவைத்துறை செய்து வருகிறது. இந்த துறையில் மாநிலம் முழுவதும் 60 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளது. இதனால், நிலங்களை அளவீடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், பத்திரம் பதிவு மற்றும் பல்வேறு துறைகளில் நில ஆர்ஜிதம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்த மாணவர்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து அவர்களுக்கு அதற்கான உரிமம் வழங்கப்படுகிறது.

இது குறித்து நில அளவை மற்றும் நிலவரி திட்டத்துறை இயக்குனர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் மூன்றாண்டு டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் துவங்கப்படவுள்ள பயிற்சியில் பங்கேற்று நில அளவை செய்வதற்காக உரிமம் பெறுவதற்குரிய 3 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து முழு விவரங்களை தமிழக அரசின் இணையதளத்தில் www.tn.gov.in காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பயற்சி பெற்ற இன்ஜினியர்கள் அளிக்கும் நில அளவீடு செய்து ஒப்புகை அளிக்கும் சான்றை இந்த துறை ஏற்றுக்கொள்கிறது என்று அந்த துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Diploma holders ,Govt , Surveyor License, Diploma, 3 months, Training, Government of Tamil Nadu
× RELATED மன அழுத்தத்தை போக்க போலீசுக்கு யோகா பயிற்சி