×

ப.சிதம்பரம் எச்சரிக்கை அபாய கட்டத்தில் பொருளாதாரம்

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தில் தேவை, நுகர்வு, முதலீடு குறைவாக உள்ளது. இதனால் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. நாட்டில் அச்சம் மற்றும் நிலையற்ற தன்மை நீடிக்கிறது. பொருளாதாரம் அவசர சிகிச்சை பிரிவில்(ஐசியு) உள்ளது என பா.ஜ அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக 4 ஆண்டுகள் இருந்த அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார். ஆனால், என்னை கேட்டால், ஐசியு.வில் இருக்க வேண்டிய நோயாளி அதற்கு வெளியே உள்ளார். அவருக்கு தகுதியற்ற டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர் என சொல்வேன்.

பொருளாதார நிபுணர்கள் எல்லாம் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். மக்கள் கையில் பணத்தை அளிப்பதற்கு பதில், கார்பரேட் வரி குறைப்பு மூலம் 200 கார்பரேட் முதலாளிகளின் கையில் அரசு பணத்தை கொடுத்துள்ளது. நிதியமைச்சர் பட்ஜெட்டில், பொருளாதாரம் மற்றும் அதன் நிர்வாகம் பற்றி பேசவே இல்லை. தனது தவறை ஒப்புக் கொள்ள மோடி அரசு மறுக்கிறது. பணமதிப்பிழப்பு, அவசர ஜிஎஸ்டி நடவடிக்கைகள் பொருளாதாரத்தை அழித்த நினைவுச்சின்ன தவறுகள் என்றார்.

Tags : P. Chidambaram , B. Chidambaram, Warning, Risk Phase, Economy
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி