×

தமிழகம் முழுவதும் கடந்தாண்டு மத்திய சிறைகளில் 65 செல்போன் பறிமுதல்: அதிகாரிகள் தகவல்

வேலூர்: தமிழகத்தில் சென்னை புழல் 1, புழல் 2, வேலூர், கோவை, கடலூர், பாளையங்கோட்டை, மதுரை, சேலம், திருச்சி, புதுகோட்டை என மத்திய சிறைகளும், திருச்சி, வேலூர், புழல் 3 பெண்கள் தனிச்சிறை மற்றும் கிளைச்சிறைகள் என மொத்தம் 138 சிறைகள் உள்ளன. சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, செல்போன் உள்ளிட்டவை தடையின்றி கிடைக்கிறது. செல்போன் மூலம் சிறையில் உள்ள கைதிகள், அடியாட்களை கொண்டு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு திட்டம் வகுத்து கொடுத்து வந்துள்ளதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் மத்திய சிறைகளில் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்து வந்தனர். கடந்த ஆண்டு மட்டும் 65 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 10க்கும் மேற்பட்ட காவலர்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2018ம் ஆண்டு ஜாமர் கருவி பொருத்தப்பட்டதால், செல்போன் நடமாட்டம் ஓரளவு குறைந்துள்ளது. அந்த ஆண்டு 80 செல்போன்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் சிக்கின. கடந்த ஆண்டு மட்டும் 65 செல்போன்கள், 80க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது, செல்போன், கஞ்சா, சிகரெட், கைதிகள் மோதல் ஆகியவற்றை ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பதால் இதை உடனடியாக அறிய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : jails ,Tamil Nadu , All over Tamil Nadu, last year, Central Prison, 65 cellphone, confiscated, officials, information
× RELATED சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில்...