×

நெய்வேலியில் படப்பிடிப்பு நிறைவு பஸ் மீது ஏறி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்

நெய்வேலி: நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு நெய்வேலியில் நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து அவர் பஸ் மீது ஏறி செல்பி எடுத்த படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ெநய்வேலிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை நெய்வேலிக்கு நேரடியாக சென்று விஜய்யிடம் விசாரணை நடத்தியதோடு, மேலும் படப்பிடிப்பை நிறுத்தி விசாரணைக்காக அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இந்த விசாரணை தொடர்ச்சியாக சுமார் 30 மணி நேரம் நடைபெற்றது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து மீண்டும் நெய்வேலி படப்பிடிப்புக்கு விஜய் வந்தார். பின்னர் சுரங்கத்தில் விஜய் சம்பந்தப்பட்ட ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கி வந்தது ‘மாஸ்டர்’ படக்குழு. இதில் விஜய் - ஆண்ட்ரியா - விஜய்சேதுபதி மூவரும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான சண்டைக் காட்சியைப் படமாக்கி வந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படப்பிடிப்பில் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு தினமும் விஜய் ரசிகர்கள் கூடத் தொடங்கினர். நேற்றுமுன்தினம் மாலை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என்எல்சி வாயிலில் கூடினர். அப்போது வேன் ஒன்றின் மீது ஏறிய நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். மேலும், ரசிகர்கள் கூட்டத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

நேற்றுடன், நெய்வேலியில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. நேற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், படப்பிடிப்பு தளத்தில் நின்றுகொண்டிருந்த பஸ் மீது ஏறி அப்போது ரசிகர்களை வணங்கி, நன்றியும் தெரிவித்தார். இதைப்பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். நெய்வேலி படப்பிடிப்பில் விஜய் பங்கேற்பது நேற்று நிறைவு நாள் என்பதால், நீண்டநேரம் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே இருந்தார். விஜய் வெளியே வந்த நேரத்தில் வெளிச்சம் குறைந்துவிட்டதால், ரசிகர்கள் அனைவருமே கையில் மொபைல் போன் வெளிச்சத்துடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் ரசிகர்களுக்கு இடையே எடுத்த செல்பியை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார் விஜய். அதில் ‘நன்றி நெய்வேலி’ என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர். ட்விட்டரில் இந்த செல்ஃபியும் ட்விட்டரில் வைரலாகி உள்ளது. அது வெளியான 1 மணி நேரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

Tags : Vijay ,fans ,shooting ,Neyveli , Neyveli, shooting completed, bus, fan, thank you, Vijay
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...