×

பிரதமரின் செயலாளர் போன்று போனில் பேசி மர்மநபர் மோசடி

புதுடெல்லி: புதுச்சேரியில் உள்ள மாகே மண்டல நிர்வாக அதிகாரி அமான் சர்மாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், தன்னை பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்‌ரா என்று அறிமுகம் செய்து கொண்டு, ஜிப்மரில் படிக்கும் தனது மகளுக்கு தேவையான சில உதவிகளை செய்து கொடுக்கும்படி கேட்டு கொண்டதாகவும் மாகே மண்டல அலுவலர்கள் தெரிவித்தனர். போனில் பேசிய நபர் குறித்து சந்தேகம் எழுந்ததால், பிரதமர் அலுவலகத்துக்கு அதிகாரிகள் தொடர்புக் கொண்டு பேசியபோது, போன் அழைப்பில் பேசியவர் போலி நபர் என்று தெரியவந்தது. இதுகுறித்து சிபிஐ.க்கு அந்த நபர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தது.

Tags : Secretary of the Prime Minister, talking on the phone, mysterious, fraud
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...