×

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ 2வது டெஸ்ட் போட்டியும் டிரா

லிங்கன்: இந்திய ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியும் (அங்கீகாரமற்றது) டிராவில் முடிந்தது. பெர்ட் சட்கிளிப் ஓவல் மைதானத்தில் கடந்த 7ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று முதலில் களம் கண்ட நியூசிலாந்து ஏ அணி முதல் இன்னிங்சில்  9விக்கெட் இழப்புக்கு 386 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (  131.5 ஓவர்). அந்த அணியில் அதிகபட்சமாக  டாரில் மிட்செல்  103*, கிளென் பிலிப்ஸ் 65, டான் கிளெவர் 53  ரன் எடுத்தனர்.

இந்திய தரப்பில் ஆர்.அஸ்வின், சந்தீப் வாரியர், முகமது சிராஜ், அவேஷ் கான் தலா 2, நதீம் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா ஏ அணி கடைசி நாளான நேற்று  109.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 467ரன் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ள இரண்டு தரப்பும் முடிவு செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மான் கில் 136, அஜிங்க்யா ரகானே 101*, விஜய் சங்கர்  66, ஹனுமா விகாரி 59, புஜாரா 53 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் எட்வர்ட் நட்டால் 2, நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர், டாரில் மிட்செல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : New Zealand ,India A ,Test match draw ,Test match , India A - New Zealand A, 2nd Test match draw
× RELATED இங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து;...