×

சில்லி பாயின்ட்...

* தென் ஆப்ரிக்காவில் நடந்த ஐசிசி யு-19 உலக கோப்பை தொடரின் பைனலில் இந்திய அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்ற வங்கதேச அணி வீரர்கள் தங்கள் அணியின் வெற்றியை ஆக்ரோஷமாகக் கொண்டாடியதுடன் இந்திய வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து ஐசிசி தீவிரமாக விசாரித்து வருவதாக இந்தியா யு-19 அணி மேலாளர் தெரிவித்துள்ளார். ‘இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என்று வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.
* ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் 9720 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் (ஸ்பெயின், 9395 புள்ளி), ரோஜர் பெடரர் (சுவிஸ், 7130 புள்ளி) அடுத்த 2 இடங்களில் உள்ளனர்.
* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் பாஸ்டர் (இங்கிலாந்து) நியமிக்கப்பட்டுள்ளார்.
* யு-19 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 போட்டியில் 400 ரன் குவித்து (சராசரி 133.33, சதம் 1, அரை சதம் 4) தொடர் நாயகன் விருது பெற்றார். விக்கெட் வேட்டையிலும் இந்திய அணியின் ரவி பிஷ்னோய் முதலிடம் பிடித்து அசத்தினார் (17 விக்கெட்).

Tags : All Sports
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...