×

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1503 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: தமிழகத்தில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1503 பேருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்  நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களிடம் இருந்து  விண்ணப்பங்கள் பெறப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று நாட்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 1503 நபர்களுக்கு அந்தந்த  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் கல்வி மேலாண்மை தகவல் மையம் மூலமாக கலந்தாய்வு நடத்தப்பட்டன.

இதன்அடிப்படையில், காலியாக இருந்த பணியிடங்களுக்கு 1,503 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். இதில் அமைச்சர்  செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன்,  பள்ளிக் கல்வி ஆணையர் தாமஸ் வைத்யன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.   


Tags : Teachers ,CM ,persons ,Edappadi , Postgraduate Teachers, Employment Order, CM Edappadi
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...