×

மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டவருக்கு விதவைக்கான நிதி வழங்குவதற்கு ஆவணங்களை கேட்ட அதிகாரிகள்: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

நெல்லை: மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு, விதவைக்கான நிதி வழங்குவதற்கு அதிகாரிகள் ஆவணங்களை கேட்டதாக கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு பெண் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே வெள்ளாளன்குளம் அபிசேகப்பட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி பூமா (37). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். பூமா மாற்றுத்திறனாளி. இவரது இடது காலில் ஊனம் இருப்பதால் அதற்காக மாற்றுத்திறனாளி அலுவலரின் சான்றிதழ் ஏற்கனவே பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2018ல் மாற்றுத்திறனாளிக்குரிய உதவித்தொகை கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனு செய்திருந்தார். ஆனால் அவர் கேட்ட உதவித்தொகைக்கு பதிலாக, அதனை மாற்றி அவரது கணவர் இறந்து விட்டதாகவும், அவருக்கு ஆதரவற்ற விதவைக்குரிய உதவித்தொகை வழங்க அதற்குரிய ஆவணங்களை கொண்டு வரும்படியும் கோட்டாட்சியர் அலுவலகத்தால் அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதில் அவர் ஆதார் அட்டை நகல், கல்விச்சான்று நகல், விதவைசான்று நகல், கணவரின் இறப்புக்கு பின்னர் வாரிசு சான்று பெற்ற நகல் ஆகியவற்றை கொண்டு வர கேட்டு கொள்ளப்பட்டிருந்தது. இதனால் மனவேதனையடைந்த பூமா, அதை மாற்றித்தரக்கோரி கடந்த சில மாதங்களாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராடி வந்தார். அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிடும்படி கூறினர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பூமா நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில், ‘எனது கணவர் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக கூறி எனக்கு ஆதரவற்ற விதவைக்கான உதவித்தொகை வழங்க உரிய ஆவணங்கள் கொண்டு வரும்படி கேட்கின்றனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளேன். நான் கேட்ட மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை இன்னமும் கிடைத்தபாடில்லை. இதை கேள்விப்பட்டதில் இருந்து எனது கணவரும் வேதனை அடைந்துள்ளார். எனவே எனக்கு மாற்றுத்திறனாளி உதவிதொகை வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Tags : recipient , Representative, scholarship, documents, paddy collector's office
× RELATED கொரோனா பிடியில் இருந்து தப்பிக்கும்...