×

பஸ்சில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் 1 கோடி நகை கொள்ளையடித்த மர்ம நபர் புகைப்படம் சிக்கியது

சேலம்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையின் கிளை, கோவையில் செயல்பட்டு வருகிறது. இதற்காக கடையின் ஊழியர் கவுதம்(26) உள்பட 3 பேர், ஹைதராபாத்தில் இருந்து 1 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த நகைகள், மற்றும் தங்க நகைளை நேற்றுமுன்தினம் கோவைக்கு   கொண்டு சென்றனர். இவர்கள் வந்த சொகுசு பஸ் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் வந்தது. அங்குள்ள ஓட்டலில் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். கவுதம் மற்றும் அவருடன் வந்தவர்கள், நகை பையை இருக்கையின் கீழ் பகுதியில் வைத்துவிட்டு சாப்பிட சென்றனர். பின்னர் வந்து பார்த்தபோது பை மட்டுமே இருந்தது. 1 ேகாடி மதிப்புள்ள நகைகளை காணவில்லை. புகாரின்படி சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர்.

 சொகுசு பஸ்சில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அதை போலீசார் ஆய்வு செய்தபோது, நகைகளை வாலிபர் ஒருவர் எடுத்துச்செல்வது பதிவாகியிருந்தது. பஸ்சில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு, அந்த நபர் பஸ்சுக்குள் ஏறி பையில் இருந்த நகை பாக்சை மட்டும் எடுத்து சட்டைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இறங்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதை வைத்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபை விரைவில் பிடிப்போம் என போலீசார் தெரிவித்தனர்.


Tags : CCTV , Bus, CCTV camera, jewelry robbery
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...