×

மத்திய பட்ஜெட்டின் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது: காங்கிரஸ்

டெல்லி: மத்திய பட்ஜெட்டின் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் புகார் தெரிவித்துள்ளார். பணமதிப்பு ரத்து, ஜி.எஸ்.டி அமலாக்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி வரிச்சலுகை ஆகியன பட்ஜெட்டுக்கு வெளியே அறிவிக்கப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் சிறுசேமிப்பு விகிதம் குறைந்துவிட்டதாக மக்களவையில் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். சேமிப்பு குறைந்தால் தொழில் முதலீடு குறையும்; முதலீடு குறைந்தால் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என்று ஜெய்ராம் ரமேஷ் பேசியுள்ளார். பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள வருவாய் இனங்களின் கணிப்புகள் நிறைவேறுமா என்று ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம் தெரிவித்துள்ளது. அரசு நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.2.1 லட்சம் கோடி, அலைக்கற்றை விற்பனை மூலம் ரூ.1.33 லட்சம் கோடி கிடைக்கும் என்பது உறுதி அல்ல. அரசு வருமானத்துக்கு பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பது என்பது சரியான நடவடிக்கை அல்ல என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Congress , Congress
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...