சத்தீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது நக்சலைட்டுகள் தாக்குதல்: கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம்!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டம் பாமேட் காவல் நிலையத்தின் கீழ் உள்ள இரப்பள்ளி கிராமத்தின் காடுகளில் நக்சல்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சி.ஆர்.பி.எப்.-ன் கோப்ரா படையின் 204வது பிரிவு வீரர்கள் காலை 10.30 மணயளவில் அப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சல்கள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதில் 4 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க மேலும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்கிடையில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நக்சல் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். அப்பகுதியில் இருந்த ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், படுகாயமடைந்த வீரர்களில் இருவர் வீரமரணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த வீரர்களில் ஒருவர், துணை தளபதி எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: