பேரணாம்பட்டு அருகே சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம்- மங்களூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் காட்பாடி முதல் கே.வி.குப்பம், குடியாத்தம்,  பேரணாம்பட்டு, பத்தலபல்லி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம் கிராமம் முதல் டிடி மோட்டூர் கிராமம் வரை உள்ள சாலையில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டுள்ளதால் வாகனங்கள் வேகமாக செல்லும்போது அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் புழுதிகள், குப்பைகள் நிரம்புகிறது.

இதனால், குடியிருப்புப் பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இரவு நேரங்களில் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் விழுந்து காயமடைந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>